Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, March 19, 2013

இப்பேர்பட்ட மூச்சுப் பயிற்சி வகுப்பு எப்போது?

முதல் கொஞ்சம் மீள் பதிவு :
இந்த சமயத்துல எங்க அப்பா 'திருச்சில மூச்சு பயிற்சி கிளாஸ் நடத்தறாங்க. நீயும் கலந்துக்கறயா?ன்னு கேட்டார். என் ஆதர்ச எழுத்தாளர் பாலகுமாரன் இதை பத்தி பலவிதமா சொல்லி இருக்கறதால என்னன்னு தான் தெரிஞ்சுக்கலாம்னு சரின்னு  சொல்லிட்டேன். போன சனிக்கிழமை காலைல 4 மணிக்கு நானும் அப்பாவும் பஸ்ல கிளம்பினோம். ஸ்பாட்டுக்கு போக 9.30 ஆகிடுச்சு.

வகுப்பெடுத்தவர் ஒரு புத்த பிக்கு. வகுப்பில் என்ன நடத்தினாங்கன்னு கேட்டா 'ஒண்ணும் நடத்தல. ஒரு நாள் முழுக்க 31 விதமா அவங்கவங்க மூச்சை கவனிச்சோம்'ன்னு தான் சொல்லணும். ஆனா அதனோட பலன் அற்புதம். நினைச்சதெல்லாம் நடந்துச்சு.


வகுப்பு முடிஞ்சதும் பஸ்ல இடம் கிடைக்கணும்னு நினைச்சேன். (ஏன்னா அது பொங்கல் லீவ்). பயணம் முழுக்க பஸ் பெரும்பாலும் காலியாகவே வந்துச்சு.

சமயபுரம் டர்னிங்ல பஸ் நிரம்புச்சு. யாராவது குண்டா வந்து உக்காந்தா அசைய முடியாதேன்னு நினைச்சு கவலைப்பட்டேன். நிறைய பேர் ஏறினாங்க. நான் என் போலவே ஒரு ஒல்லி பெண் ஏறியதை பார்த்தேன் அந்த பெண் வந்து உக்காந்தா பரவாயில்லையே ன்னு நினைச்சேன். நிறைய சீட்  காலியா இருந்தாலும் கரெக்டா அந்த பொண்ணே வந்து என் பக்கத்து சீட்லயே உக்காந்துச்சு.

காத்து சேராதுன்னு எனக்கு முன்னாடி சீட் காரங்க ஜன்னல சாத்தணும்னு நினைச்சேன். அதுவும் நடந்துச்சு.

வீட்டுக்கு வந்து சேரும்போது மணி நைட்டு 10.30. முகம் கழுவல, வைப் பேப்பர் கொண்டு போகல முகம் எப்படி இருக்குமோன்னு கண்ணாடிய பார்த்தா  சர்ப்ரைஸ்!!! காலைல வச்ச திருநீறு  கூட கலையல. முகம் அவ்ளோ பிரகாசமா இருந்துச்சு. முகத்துல கொஞ்சம் கூட டயர்ட் இல்லையேன்னு அம்மாவுக்கு கூட ஆச்சரியம்.

 இத்தனை வருஷமா கவனமில்லாம அனிச்சையா  செஞ்சிட்டு இருந்த மூச்சு விடறதை ஒரே ஒரு நாள் கவனிச்சதுக்கே இவ்வளவு பலன். அதெப்படி மூச்சு விடறதுக்கும் இப்படி எல்லாம் நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?ன்னு கேக்கலாம். அதை ஒரு குரு மூலமா கேட்டீங்கன்னா உங்களுக்கும் நன்மை, நம்பிக்கை வரும். நான் இப்ப தான் எல்.கே.ஜி. எனக்கு சரியா சொல்ல வரல. எங்கயாச்சும் இது போல வகுப்பு நடந்துச்சுன்னா நீங்களும் கலந்துக்கோங்க. அதை அனுபவிச்சாதான் அருமை தெரியும். அப்படி எதுவும் அற்புதம் நடக்காட்டியும் கூட, உடம்பு அசையாம எதை பத்தியும் நினைக்காம மூச்சை பத்தி மட்டும் உங்க கவனம் இருக்கறது ஆனந்தம். எந்திரிக்கவே மனசு வராது. நல்லா இருக்கும். வேற எந்த வேலை செஞ்சுட்டு இருந்தாலும் உங்க கவனம் உங்க மூச்சுக்கே வரும். அது ஒரு வித சுகம்ங்க.

நண்பர்கள் இந்த மூச்சுப்பயிற்சி வகுப்பு எங்கே எப்போது நடக்கும் என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு நற்செய்தி. அடுத்த வகுப்புகள் ஆரம்பிக்கப் படுகின்றன. 

மார்ச் 30ம் தேதி நடைபெறுகிறது  

முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப் படுவீர்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணை  தொடர்பு கொள்ளுங்க:
98437 71449

Monday, March 18, 2013

லேசிக் சிகிச்சைக்கு பிறகு


ஆபரேஷன் முடிஞ்சதும் பெட்ல எல்லாம் படுக்க வைக்கல. அப்படியே கைய புடிச்சு கூட்டிட்டு போய்  ஒரு சேர்ல உக்கார வைக்கறாங்க.சினிமால காட்டற மாதிரி முருகன் போட்டோ, நமக்கு வேண்டியவங்க எல்லாம் முதன்முதல்ல காட்டல. டாக்டர் தான் நமக்கு முன்னாடி வந்து கண்ணை திறந்து பாருங்கன்னு சொல்றாரு. அவரை பார்த்ததுக்கு அப்பறம் தான் நானா தேடி எங்க வீட்டுக்காரர் எங்கன்னு பார்த்தேன். அவர் தியேட்டருக்கு வெளில நான் வந்துட்டேனான்னு எட்டி பார்த்துட்டு இருந்தார். ஹப்பாடா... அவர் முகத்தை மறுபடியும் (அதுவும் தெளிவா) பார்க்க முடிஞ்சுதேன்னு  கடவுளுக்கு நன்றி சொல்லிகிட்டேன்.


அப்பறம் மறுபடியும் ஒரு முறை விஷன் செக் பண்ணிக்கறாங்க. எல்லாம் சரியா இருந்தா மாத்திரை, சொட்டு மருந்தை எப்ப எப்படி உபயோகிக்கணும்னு ஒரு கிளாஸ் எடுத்துட்டு கிளம்ப சொல்லிடறாங்க. வீடு பக்கம் என்பதால் நான் கணவரின் பைக்கிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். ஒண்ணும்  பிரச்சனை  இல்ல.ஸோ  லேசிக் ஆபரேஷன  தைரியமா பண்ணிக்கலாம். ஒண்ணும் பயப்பட தேவையே இல்ல.ஆபரேஷனுக்கு பயந்துகிட்டு இந்த காலத்துல யாராவது குழந்தை பெத்துக்காம இருக்காங்களா? அது மாதிரிதான் இதுவும்.ஒண்ணும்  பயப்படாதீங்க.... பார்வை குறைபாடு  தைரியமா ஆபரேஷன் பண்ணிக்கங்க.
பொதுவான கட்டுப்பாடுகள்( குறைந்தது ஒரு மாதத்துக்கு):
1. பளீரென்ற ஒளியை பார்ப்பதை தவிர்க்கணும்

2. டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பதை குறைந்தபட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் 2 வாரம் விட்டு விடுங்கள். மனக்கட்டுப்பாடு இல்லாமல் பார்த்தால் கண்களில் பிரச்சனையை வரும்.

3. முகம் கழுவுதல், தலைக்கு குளித்தல் ஆகியவை டாக்டர்  சொன்ன பிறகு மட்டுமே செய்யவும். தண்ணீரில் கிருமிகள் இருந்தால் காலத்துக்கும் கண்ணில் பிரச்சனை நிரந்தரமாகி விடும். ஆபரேஷன் அன்று தலைக்கு குளித்துக்கொள்வது  உசிதம்.

4. மொபைல் உபயோகித்தல் ரேடியேஷன் பிரச்சனை  ஏற்படுத்தும் என்பதால் குறைந்தது 3 நாட்களுக்காவது தவிர்க்கவும்.

5.  ஒரு வாரம் புத்தகம் படித்தல் கூட வேண்டாம்

6. தூசு படாமல் பார்த்துக்கணும்.

7. கண்களை எக்காரணம் கொண்டும் தேய்க்க கூடாது.

8. ஒரு மாசத்துக்கு தூங்கும்போதும் ஹாஸ்பிடலில் தந்த கண்ணாடி அணிந்தே தூங்க வேண்டும். அப்ப தான் நாம நம்மளையும் அறியாம கண்ணை அழுத்தாம இருப்போம்.

9. புருவம் எடுத்தல், பேசியல் போன்றவற்றுக்கு ஒரு மாதமாவது (சரியான  கால அளவு தெரியல) லீவ் விட்டுடுங்க. ஆபரேஷன் முன்பே வேணா செஞ்சுக்கங்க. கண் மை கூட தவிர்த்துடுங்க .

10. ஷவரில் குளிக்கும்போது கண்களில் தண்ணீரின் சாரல் எப்போதும் நேரடியாக விழக்கூடாது.

11. உடற்பயிற்சிகள் , நீச்சல், நீர் நிறைந்த குடம், பக்கெட் போன்ற பளு தூக்குதல் வேண்டாம்.

12. ஆபரேஷனுக்கு பிறகு இரண்டு கண்களையும் ஒன்றை மறைத்து ஒன்று எப்படி தெரியுதுன்னு பார்க்க கூடாது. அது கண் பார்வையை பாதிக்குமாம்.

13. குறைந்தது 3 டிராப்ஸ் தருவாங்க. ஒவ்வொண்ணையும் குறைந்தது 5 நிமிட இடைவெளிக்கு பிறகே உபயோகிக்க வேண்டும்.

14. Life time க்கு வண்டியில போகும்போது plain glass போட்டுக்கணும். அப்பதான் தூசி மற்றும் கண்கள் காற்றில் காஞ்சு போறதுல இருந்து கண்களை பாதுகாக்க முடியும்.

15. இவ்வளவு சொல்றாங்களேன்னு கண்ணை மூடியே வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. கண்கள் விழித்திருப்பதும் அவசியம்.

அவ்ளோதாங்க அட்வைஸ் .
ஹாங்.... சொல்ல மறந்துட்டேனே..
டாக்டர் கிட்ட லேசர் பண்ணிக்க பயமா இருக்கு. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு சொல்றாங்கன்னு சொன்னப்ப டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா?
"யார்கிட்டயும் இதை பத்தி கேக்காதீங்க முக்கியமா நெட்ல இதை பத்தி எல்லாம் படிக்காதீங்க"