Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Saturday, August 4, 2012

ரொம்ப நாள் ஆகிடுச்சுல்ல....

அட போங்க பாஸ்.... உப்பு விக்க போனா மழை வருது. மாவு விக்க போனா காத்தடிக்குதுங்கற கதையாகி போச்சு நம்மளோடது. நாம TNPSC அப்ளிகேஷன் fill பண்றது எப்படின்னு பதிவு போட்டா நெட்ல பதிவு பண்ண சொல்லிடறாங்க நாம ப்ளாக் எழுதறது எப்படின்னு பதிவு போட்டா பிளாக்கர் டெம்ப்லேட்டயே மாத்திடறாங்க பேசாம மத்திய அரசுக்கு சப்போர்ட் பண்ணலாமான்னு இருக்கேன். யார் கண்டா? ஆட்சி மாற்றம் வந்தாலும் வந்துடும்ல..

அப்பறம்....
நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுடுச்சு...
ஆடி மாசத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்...
எல்லா சொந்தக்காரங்களையும் ரொம்ப நாளைக்கப்பறம் பார்க்கற மாதிரி பில்ட் அப் குடுத்து புது பொண்ணுங்கற சீன் போடறேன். ..
எப்படா ப்ளாக் பக்கம் வருவோம்னு இருந்தேன்.
வந்து பார்த்தா... 'இப்படி' போயிட்டு 'அப்படி' வரதுக்குள்ள எல்லாம் மாறி கிடக்கு.இப்ப பழைய போஸ்டெல்லாம் அழிக்கறதா? இல்ல அப்படியே வெச்சுக்கறதா  ஒண்ணும்  புரியல. (இதுக்கு முன்னாடியும் ஒண்ணும் புரியாதுங்கறது வேற விஷயம்.)

 புருஷன் வீட்ல வலது கால வெச்சு உள்ள நுழைஞ்சப்பவும்  சரி ப்ளாக் போட விண்டோ ஓபன் பண்ணினப்பவும் சரி  ஒரே எண்ணம் தான் வந்துச்சு....
"கண்ணை கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கே....

கல்யாண சமயத்துல வந்த பிசினஸ் ஆர்டர்ஸ முடிச்சுட்டு களம் இறங்கறேன். போஸ்ட் போடாம காஞ்சு கிடக்கறேன். பொறுங்க மக்களே... விரைவில் பொங்கி எழுந்து வரேன். ..




5 comments:

வெங்கட் நாகராஜ் said...

சீக்கிரமே வருக!

நல்ல பதிவுகள் தருக!

cheena (சீனா) said...

வாங்க வாங்க - ஆடி மாசம் - அம்மா வூடு - இப்ப என்ன அவசரம் இங்க எழுதறதுக்கு ? ம்ம்ம் - சரி சரி நான் சொன்னதெல்லாம் செய்யுங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

MARI The Great said...

welcome back :)

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க வாங்க...
தொடர வாழ்த்துக்கள்...

சாதாரணமானவள் said...

Thanks to all :)