Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, July 25, 2011

விர்சுவல் வில்லேஜர்ஸ்

எனக்கு மறுபடியும் பைத்தியம் பிடிச்சுடுச்சு. அட.... ஆமாங்க... இந்த விர்சுவல் வில்லேஜர்ஸ் ன்னு ஒரு கேம் இருக்கே தெரியுமா? அந்த கேம்க்கு நான் கிட்டத்தட்ட அடிமை... இதுவரை ஐந்து வெர்ஷன் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் அந்த ஐந்தாவது வெர்ஷன் வெளிவந்துள்ளதை தெரிந்துகொண்டு, டவுன்லோட் செய்து,  மாங்கு மாங்கென்று விளையாடிக்கொண்டு இருக்கிறேன். அப்படி என்ன இருக்கு இந்த கேம்லன்னு கேக்கறீங்களா? 

விர்சுவல் வில்லேஜர்ஸ் - என்ற இந்த விளையாட்டு உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களால் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டு மிக வித்யாசமானது. பேஸ்புக்கின் 'Farm ville' வை போல  நாம் கம்ப்யுட்டரை அணைத்து விட்டாலும் வேலை நடந்துகொண்டே இருக்கும். ஆனால் farm ville க்கும் இதற்கும் பல வித்தியாசங்கள். Farm ville வில் நாம் விவசாயம், அறுவடை சம்பந்தமான செயல்களை மட்டுமே திரும்பத்திரும்ப செய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் விர்சுவல் வில்லேஜர்ஸ் டோட்டலி டிபரென்ட். 


சில பழங்குடியினர் தங்கள் தீவில் எரிமலை வெடித்ததால் அங்கிருந்து தப்பி ஆளரவமற்ற, இயற்கை எழில் கொஞ்சும் 'ஐஸோலா'  என்னும் தீவுக்கு வந்து சேர்கிறார்கள். அப்படி வந்தவர்கள், அந்த தீவில் தங்களின் உடனடி தேவையான உணவை தேடிக்கொள்வதுடன், பதினாறு புதிர்களையும் வெற்றிகொள்ள வேண்டும். இது தான் விளையாட்டு.
 
மற்ற விளையாட்டுகளை போல சுடுதல், கொல்லுதல் போன்ற விஷயங்கள் இல்லாததால், அநேகமாக ஆண்களுக்கு பிடிக்காது. (சில பெண்களுக்கும்:-)) ஆனால் தங்களுடைய மேலாண்மை திறனை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் இந்த விளையாட்டை விரும்புவார்கள்.
 


முதன்முதலில் இந்த விளையாட்டை விளையாடும்போது, நான் விளையாண்ட விளையாட்டுகளிலேயே இது வித்யாசமாக இருக்கே என்று ஆசை ஆசையாக விளையாடினேன். அடுத்த நாள் பெரிய இவளாட்டம் அம்மாவிடம், 'என் ஆளுங்களுக்கு எல்லாம் சாப்பாடு போடணும், நான் சீக்கிரமா போகணும்'ன்னு சீன் காட்டிட்டு வந்து பார்த்தா... என் மக்கள் அத்தனை பேரும் ஒரே நாளில் இறந்து விட்டார்கள். காரணம், நான் தூங்க போகும்போது கேமை pause வைக்கவில்லை.அதன்பின் சோகத்துடன், மீண்டும் ரீஸ்டார்ட் செய்து வேறு ஆட்களை போட்டு விளையாட ஆரம்பித்தேன். அப்படியும். என்னால் புதிர்களை தீர்க்க முடியவில்லை. அதன் பின் நெட்டில் தேடியபோது அதன் cheat code, puzzle solving methods எல்லாம் கிடைத்தது. அதனை கொண்டு அந்த விளையாட்டை வெற்றிகரமாக முடித்தேன். அதுக்கப்பறம் ஒவ்வொரு வெர்ஷனா டவுன்லோட் செய்து ஒவ்வொரு விளையாட்டையும் முடிப்பதே பொழப்பா கிடந்தேன்.
 




இந்த விளையாட்டை நான் விளையாடுவதை பார்க்கும் அத்தனை பேரும் காறி துப்பிட்டாங்க... இந்த வயசுல (அதாங்க... கழுதை வயசுல)  சின்ன பிள்ளையாட்டம் இந்த கேமை விளையாடறேன்னு. நாம அதெல்லாம் கண்டுகிட்டதே இல்ல... என் பார்ட்னர் என்னை திட்டி திட்டி வேலை வாங்குவார். ஒரு வழியா நிம்மதியா இருந்த அவரை மீண்டும் டென்ஷன் ஆக்க ஆரம்பித்துள்ளேன். அவர்கிட்ட நான் சொல்ல விரும்பும் ஒரே பஞ்ச் டயலாக் ......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......

அவங்கள நிறுத்த சொல்லுங்க.... நான் நிறுத்தறேன்...

Monday, July 4, 2011

நண்பர்களே... கோவிச்சுக்காதீங்க...

நாம மட்டும் இவங்க ப்ளாக பார்க்கணும், வோட்டு போடணும், கமென்ட் போடணும், பாலோயர் ஆகணும், இவங்க மட்டும் இதெல்லாம் பண்ண மாட்டாங்க.... இது எந்த ஊர் நியாயம் னு என் தளத்துக்கு வரவங்க மட்டும் இல்லாம, மற்ற தளத்துக்கு போறவங்களும் நினைக்கலாம். நானும் அப்படி நினைப்பதுண்டு. ஆனா, அதே சமயம், அவங்க நிலையையும் யோசிச்சு பாருங்க. வீட்ல நெட் கனெக்ஷன் கொடுத்துட்டு பொழுது போறதுக்காக பதிவு போடறவங்க ரொம்ப குறைச்சல். பெரும்பாலும் ஆபிஸ்ல, மீதி பிரவுசிங் சென்டர்ல, இன்டர்நெட் கனெக்ஷன் ப்ரீயா இருக்கற பிரெண்டுங்க ரூம்ல னு போய் பதிவு போடறவங்க தான் அதிகம். ஆபிஸ் வேலை, கூட வேலை செய்யறவங்க தொந்தரவு, பிரெண்டு ஊருக்கு போயிட்டான், பிரெண்டு வீட்டுல மூஞ்ச தூக்கறாங்க னு பல தொந்தரவுக்கு மத்தியில, அவங்கவங்க படைப்ப கொண்டு வர்றதே பெரிய விஷயமா இருக்கு. இதுக்கு நடுவுலயும் அவங்கவங்களால முடிஞ்சவரைக்கும் கமென்ட், வோட்டு எல்லாம் போடற வேலைய எல்லாருக்கும் இல்லாட்டியும், இந்த முறை இவங்களுக்கு, அடுத்த முறை அவங்களுக்குன்னு போட்டுட்டு தான் இருக்கோம். அதிலும் சில பாலோயர்கள் என்ன பேர்ல பதிவு எழுதறாங்கனு லிங்க் ல குடுக்கறதே இல்லை. மெயில் ஐடியும் கிடையாது. அப்பறம் எங்க போய் நாங்க உங்களுக்கு பாலோயர் ஆகறது? கமென்ட் குடுக்கறது?

என் பதிவு பாலோயர்களுக்கு ஒரு வேண்டுகோள்... நீங்க ஏதாவது பதிவு எழுதுபவர்களா இருந்தால், எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க ப்ளீஸ். அதே சமயம், வேலைப்பளு காரணமாக, என்னால் ஒரே நேரத்தில் எல்லோருக்கும் கமென்ட் கொடுக்க முடியாது. மாதம் ஒரு முறை நிச்சயம் உங்கள் எல்லா பதிவுகளுக்கும் தனித்தனியாக கமென்ட் குடுக்கறேன். இதே விஷயத்தை உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். பிரபல பதிவர் மாணவன் சொல்வது போல 'பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.'