Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, June 26, 2011

ஸ்கூல் நாட்கள்....

ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு....

ஞாபகம் இருக்கா? நாம ஸ்கூல் போன நாட்கள்....

இதே ஜூன் மாதங்கள்ல மறுபடி ஸ்கூல் வேன், ஆட்டோ, பஸ் வந்துடும்னு அவசர அவசரமா கிளம்ப ஆரம்பிப்போம்.
நம்ம ப்ரெண்டும் நம்ம கிளாஸ்கே வரணும்னு வேண்டிக்குவோம்.

ஹைட் பிரகாரம் உட்கார வைக்கும்போது, நம்ம பிரெண்ட் பக்கத்துல நின்னு, ரெண்டு பேர் உயரத்தையும் சமமா காட்டுவோம். 

போய் நம்ம சீட்ல உட்கார்ந்ததும் மே மாத விடுமுறையில போன படத்தை பத்தி, ஊரை பத்தி கதையடிப்போம். 

புது டைம் டேபிள் ல games period எப்ப வருதுன்னு தேடுவோம். 

அந்த பீரியட எந்த டீச்சராவது எடுத்துகிட்டா கோபப்படுவோம்.

புது மிஸ் கிட்ட நல்ல பேர் வாங்க ட்ரை பண்ணுவோம்.

டீச்சர் புக் கேட்கும்போது நம்ம புத்தகத்த வேகமா முண்டியடிச்சுட்டுd குடுப்போம்.
 

பேசறவங்களோட பேர் எழுதற ஆளுக்கு தெரியாம, வாய அசைக்காம பேசிப்போம். 

பிரெண்ட்சுக்குள்ள சண்டை வந்தா டெஸ்க்ல கோடு போட்டு இடம் பிரிப்போம்.

ஒவ்வொரு டீச்சருக்கும் ஒவ்வொரு பேர் அல்லது செய்கை secret symbol ஆ இருக்கும். 

டீச்சருக்கு தெரியாம பேசிக்கறது, சிரிக்கறது, முக்கியமா.... வந்த சிரிப்பை அடக்கறதுனு பல விஷயம் நடக்கும். 

மத்தியான சாப்பாட்ட ஷேர் பண்ணிப்போம். 

பிரெண்ட்ஸ் செட் பெருசாக ஆக, நாம லஞ்ச் சாப்பிடற இடமும் கிளாஸ் ரூம், சைக்கிள் ஸ்டான்ட், கிரௌண்ட் னு பெருசாகிட்டே  போகும். 

லஞ்ச் ப்ரேக்ல விளையாட்டு, சிலருடைய படிப்ஸ் சீன்... 

மத்தியான பிரீயட்ல வர தூக்கத்தை கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணுவோம்.
சாயந்தரம் ஸ்கூல் விட்டதும் யார் முதல்ல வெளில போறதுன்னு சின்ன கிளாஸ் ல போட்டி போடுவோம்.

பெரிய கிளாஸ் வந்த பிறகு ஸ்கூல் விட்டு வெளில கடைசி செட்டா கதைபேசிட்டு போவோம். 

மன்த்லி டெஸ்ட்ல வாங்கின மார்க்க கம்பேர் பண்ணிப்போம். 

அடுத்த மாசம் எப்படியும் அடுத்தவங்கள விட முந்தணும்னு நெனச்சுக்குவோம்.

ஸ்கூல் போற நேரத்துலதான்  ப்ரோக்ரஸ்  ரிப்போர்ட்ல அப்பாகிட்ட காட்டி கையெழுத்து வாங்குவோம்.

ஞாயிற்றுகிழமைக்கு அப்பறம் ஞாயிற்றுகிழமையே வரணும்னு வேண்டிப்போம்.

திங்கள்கிழமை காலைல தான் முக்கியமான ஹோம்வொர்க்க பண்ணுவோம்.

குரூப் போட்டோல பெஸ்ட் பிரெண்டு பக்கத்துல தான் நிப்போம். காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு னு பக்தியோட போய் பரீட்சை எழுதுவோம்.

எப்படா லீவ் வரும்னு மட்டும் இல்லாம எத்தனை நாள் லீவ் அப்படிங்கறதும் முக்கியமா இருக்கும். 


அப்பறம் மறுபடி பழையபடி.....

ஹ்ம்மம்ம்ம்ம் .....
 

இந்த பதிவை என் எல்லா ஸ்கூல் பிரெண்ட்சுக்கும்... பள்ளி வாழ்க்கையை நேசிப்பவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

இந்த பதிவுக்கான கேள்வி:  
சிம் கார்டுக்கு தமிழ்ல என்ன?

Monday, June 20, 2011

குதிக்க முடியாத விலங்கு எது?

வெகுநாட்கள் கழித்து பதிவிடுகிறேன்... ஆரம்பிச்ச புதுசுல தான் பதிவிட எக்கச்சக்கசக்கமான விஷயங்கள் இருக்கற மாதிரி இருந்துச்சு. இப்ப என்னடான்னா ப்ளாகர்க்கு உள்ள வந்து பாதி டைப் பண்ணி, இதெல்லாம் ஒரு விஷயமான்னு வெளில வந்துடறதே பெரும்பாலும் நடக்குது. தினமும் பதிவு போடறவங்களுக்கு உண்மையிலேயே HATS OFF!

சரக்கே இல்லாததால சில interesting facts ஐ mobile inbox ல இருந்து கடன் வாங்கி இங்கே போடறேன்.

1. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவுல இறங்குனப்ப அவர் வயசு 68. 
2. ஆஸ்கார் விருதின் எடை 4 கிலோ தங்கம்
3. ஜப்பானிய டைப் ரைட்டரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 2863 
4. கோக் பானத்தின் உண்மை நிறம் பச்சை
5. இரண்டு எலிகள் 18 மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் எலிகளை உற்பத்தி பண்ண முடியும்
6. விலங்குகளில் யானையால் மட்டும் குதிக்க முடியாது.
7. சராசரியாக ஒரு நாளில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் 30 கோடி கிலோ மீட்டர்கள் 
8. சராசரியாக தலை முடி ஒரு நாளில் 0.425 செ.மீ வளர்கிறது 
9. வாய் ஒரு நாளில் பேசும் வார்த்தைகளின் சராசரி எண்ணிக்கை 4800 வார்த்தைகள் 
10. சராசரியாக ஒருநாளில் கண்கள் 42 லட்சம் முறை சிமிட்டப்படுகிறது.

 நான் ஒரு புதிர் கேக்கறேன். அதுக்கு பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க.
It comes once in an year and twice in a week. But it never comes in a month. What is it?